30 வயதுக்குப் பிறகு பெண்கள் இதை கட்டாயம் செய்யனுமாம்!
By Kanimozhi Pannerselvam
08 Jan 2024, 15:32 IST
மார்பக புற்றுநோய் ஸ்கிரீனிங்
30 ஆண்டுகளுக்குப் பிறகு, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே கட்டாயம் மார்பகப் புற்றுநோயை பரிசோதிக்க பெண்களுக்கு மேமோகிராபி செய்ய வேண்டும்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்
21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது பேப் ஸ்மியர் பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
பெண்கள் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும். கூடுதலாக, உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளின் குடும்ப வரலாற்றைக் கொண்ட பெண்கள் தங்களைத் தாங்களே அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
எலும்பு பரிசோதனை
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். எலும்புகள் கட்டமைப்பு சட்டத்தை உருவாக்குகின்றன, எனவே உடலின் சரியான செயல்பாட்டிற்கு வலுவாக இருக்க வேண்டும்.
நீரிழிவு பரிசோதனை
35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இரத்த குளுக்கோஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒரு பெண் பருமனாக இருந்தால் அல்லது குடும்பத்தில் யாராவது ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், முன்கூட்டியே பரிசோதனை செய்வது அவசியம்.
தைராய்டு
30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கொஞ்சம் கவனித்தல் மற்றும் வழக்கமான பரிசோதனைகள் மூலம் தைராய்டு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். குறிப்பாக பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் இருப்பதால், மருத்துவரின் ஆலோசனையுடன் அவ்வப்போது தகுந்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.