பெண்களுக்கு கொய்யா இலை டீ தரும் நன்மைகள்

By Gowthami Subramani
23 Jun 2024, 17:30 IST

கொய்யா இலை

கொய்யா இலைகளில் வைட்டமின் பி, சி, புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது

பெண்களுக்கு கொய்யா இலை டீ

கொய்யா இலையில் தயாரிக்கப்படும் டீ உட்கொள்வது பெண்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் பெண்களுக்கு கொய்யா இலை எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் காணலாம்

உடல் எடை குறைய

கொய்யா இலைகளின் கஷாயம் உடலில் காணப்படும் கூடுதல் கலோரிகளை எரிக்கிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

செரிமானத்தை மேம்படுத்த

கொய்யா இலை கஷாயம் உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது. இதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

கொய்யா இலை டீயைத் தொடர்ந்து அருந்துவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் வைரஸ் தொற்றுக்களிலிருந்து விடுபடலாம்

மாதவிடாய் வலி நிவாரணியாக

மாதவிடாய் காலங்களில் பெண்கள் சந்திக்கும் வயிற்று வலி, இடுப்பு வலி உள்ளிட்ட பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெற, கொய்யா இலை டீ உதவுகிறது

புற்றுநோய்க்கு எதிராக

கொய்யா இலைகளில் லைகோபீன் என்ற தனிமம் நிறைந்துள்ளது. இந்த தனிமம் புற்றுநோய் அபாயத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது