மாதவிடாய் பிடிப்புகள் மிகவும் தீவிரமான மற்றும் சங்கடமானதாக உணரக்கூடிய நிலையாகும். இதை சமாளிக்க மருந்துகளை உட்கொள்வது ஒரு வழியாகும். எனினும், இயற்கையான வழிகளைக் கையாள்வது சிறந்த தேர்வாகும். இதில் மாதவிடாய் பிடிப்பு குறைய சாப்பிட வேண்டிய பழங்களைக் காணலாம்
வாழைப்பழங்கள்
இதில் போரான் உள்ளது. இது மாதவிடாய் பிடிப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் B6 அதிகளவு உள்ளது. இவை வீக்கத்தைக் குறைக்கவும், கருப்பை தசைகளை தளர்த்தவும், மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது
தர்பூசணி
தர்பூசணி நீரேற்றம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த பழமாகும். இது வீக்கத்தைக் குறைக்கவும் , தசை வலியைப் போக்கவும் உதவுகிறது. குறிப்பாக தசைப்பிடிப்பு உள்ளிட்ட டிஸ்மெனோரியாவின் அறிகுறிகளைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது
அன்னாசிப்பழம்
இந்த பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதி உள்ளது. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், ளை தளர்த்தும் மற்றும் வலியைக் குறைக்கவும் உதவுகிறது. இதை ஒரு புதிய பழமாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது சாறு வடிவில் எடுத்துக் கொள்ளலாம்
பப்பாளி
பப்பாளியில் தசைச் சுருக்கங்களை எளிதாக்கும் ஒரு நொதியான பப்பைன் உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது. எனவே மாதவிடாய் காலங்களில் பப்பாளியை எடுத்துக் கொள்வது நல்லது
ஆரஞ்சு
இதில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை தசைப்பிடிப்பைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது
ஆப்பிள்
இது நார்ச்சத்து அதிகம் உள்ள பழமாகும். இவை செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள குர்செடின் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. இது மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது