மஞ்சள் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த சமையல் பொருளாகும். இதில் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். எனவே இது மாதவிடாய் பிடிப்புகளுக்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக அமைகிறது
மாதவிடாய் பிடிப்புகள்
இது மாதவிடாய் காலத்தின் போது அடிவயிற்றில் ஏற்படும் வலியைக் குறிக்கிறது. இது ஒரு சாதாரண நிலையாகும். இதன் தீவிரம் நபருக்கு நபர் வேறுபடலாம். இதன் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கும்
அறிகுறிகள்
பல சந்தர்ப்பங்களில், கீழ் முதுகுவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு அல்லது தலைவலி போன்றவை மாதவிடாய்க்கான அறிகுறிகளாகும். இந்நிலையில் மஞ்சள் உட்கொள்வது மாதவிடாய் பிடிப்புகளுக்கு எளிய மற்றும் பயனுள்ள தீர்வாக அமைகிறது
மஞ்சள் பால்
மஞ்சள் பால் தயார் செய்வதற்கு சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சிறிது கருப்பு மிளகு மற்றும் சிறிது இஞ்சி சேர்த்து சூடுபடுத்த வேண்டும். இதை குறைந்த தீயில் 5 முதல் 10 நிமிடங்கள் வைத்து வடிகட்டலாம். சுவைக்கு தேன் அல்லது எலுமிச்சை சேர்க்கல
மஞ்சள் டீ
மஞ்சள் டீயைத் தயார் செய்வதற்கு 1 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்க வேண்டும். பிறகு, இதை வடிகட்டலாம். இதில் சுவைக்காக தேன், எலுமிச்சை சேர்க்கலாம்
மஞ்சள் ஸ்மூத்தி
மஞ்சள் ஸ்மூத்தியைத் தயார் செய்வதற்கு பாதாம் பால், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்த்து கலக்க வேண்டும். இதில் சுவைக்கு தேன் அல்லது வெல்லம் சேர்க்க வேண்டும்
மஞ்சள் நீர்
மஞ்சள் தண்ணீரை தயார் செய்வதற்கு ஒரு கிளாஸ் வெந்நீரில் 2 சிட்டிகை மஞ்சள் தூளை கலக்கி, குடிக்கலாம். இதன் சுவையை அதிகரிக்க எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்
பக்க விளைவுகள்
மாதவிடாய் பிடிப்புகளுக்கு மஞ்சள் ஒரு இயற்கையான தீர்வாகும். ஆனால் ஒவ்வாமை எதிர்விளைவுகளைத் தவிர்க்க மஞ்சளைப் பயன்படுத்தும் முன்பாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்