தயிரில் மெக்னீசியம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கால்சியம் அதிகமாக உள்ளது, இது வீக்கத்தை குறைக்க உதவுகிறது மற்றும் மாதவிடாய் பிடிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
டார்க் சாக்லெட்
டார்க் சாக்லேட் மெக்னீசியத்தின் வளமான மூலமாகும், மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு இழுத்து பிடிப்பது போன்ற கடுமையான வலிகளை குறைக்கவும் மற்றும் தசைகளுக்கு தளர்வளிக்கவும் உதவுகிறது.
வால்நட்ஸ், பாதாம் மற்றும் முந்திரி போன்ற நட்ஸ் வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது.
இஞ்சி
இஞ்சியில் அதிக அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது தசைகளை தளர்த்தவும், மாதவிடாய் பிடிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.
மஞ்சள்
இது அழற்சி எதிர்ப்பு முகவராக செயல்படும் குர்குமின் நிறைந்துள்ளதால், மாதவிடாய் வலிக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும்.