அச்சச்சோ ஆபத்து... மாதவிடாய் காலத்தில் இந்த உணவு பக்கம் திரும்ப கூட கூடாது!
By Kanimozhi Pannerselvam
22 Jan 2024, 18:15 IST
மாதவிடாய் வலி
மாதவிடாய் காலத்தில் குளிர்ந்த நீர் அருந்துவதையும் குளிர்ந்த உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை மாதவிடாய் பிடிப்பை மோசமாக்கும்.
குளிர்ந்த உணவுகள்
மாதவிடாய் சமயத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடும் போது, அது கருப்பை மற்றும் பிறப்புறுப்பு சுவர்களில் உள்ள தசைகளை பதற்றமடையச் செய்கிறது. இந்த தசைகள் மேலும் நீட்ட முடியாது. அதனால்தான் இது அசௌகரியத்திற்கு வழிவகுக்கிறது.
சில ஆய்வுகளின்படி, ஐஸ்கிரீம் மற்றும் குளிர் இனிப்புகள் சாப்பிடக்கூடாது, ஏனெனில் அவை பிடிப்புகள் மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஐஸ் வாட்டர் கூடவே கூடாது
குளிர்ந்த நீரைக் குடிப்பது நமது குடலின் வெப்பநிலையைக் குறைக்கிறது என்று நம்பப்படுகிறது, இதன் காரணமாக குடல்கள் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாது. இதனால் நமக்கும் முகப்பரு வரலாம்.
எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?
ஐஸ் வாட்டர் அல்லது ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மிகவும் குளிர்ந்த ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். அன்னாசி, தர்பூசணி போன்ற குளிர்ச்சியான பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.