கருப்பு திராட்சையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை சாப்பிடுவதால் பெண்களுக்கு எவ்வளவு நல்லது தெரியுமா?
கர்ப்ப காலத்தில் நன்மை பயக்கும்
கர்ப்ப காலத்தில் கருப்பு திராட்சை சாப்பிடுவது குழந்தைக்கு நன்மை பயக்கும். இதனை உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
முடிக்கு நன்மை பயக்கும்
கறுப்பு திராட்சையில் நல்ல அளவு வைட்டமின் ஈ உள்ளது. இது முடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாற்றுவதற்கு மிகவும் நன்மை பயக்கும்.
தோல் பொலிவை தரும்
சருமத்தில் கொலாஜனை ஊக்குவிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகள் கருப்பு திராட்சையில் காணப்படுகின்றன. இதனால் சருமம் இளமையாகவும், பளபளப்பாகவும் மாறும்.
எடை இழப்பு
கருப்பு திராட்சையில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது. இதனால் எடை குறைக்க உதவுகிறது.
செரிமானத்தில் நன்மை
நல்ல அளவு நார்ச்சத்து கருப்பு திராட்சையில் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனை சாப்பிடுவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருங்க
கருப்பு திராட்சையை உட்கொள்வது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதை சாப்பிடுவதால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி, இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.