கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வது மிகவும் அவசியமாகும். இந்நிலையில் சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிக முக்கியமானது. அதன் படி, தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை ஆதரிக்க ஒமேகா-3 சப்ளிமெண்ட்ஸ் எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்
இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க
கர்ப்ப காலத்தில் இதயம் அதிக நேரம் வேலை செய்கிறது. இந்நிலையில் ஒமேகா-3 சப்ளிமெண்ட்ஸ் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இது இதயத்தை வலுவாக மற்றும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது
குழந்தையின் மூளை வளர்சிக்கு
ஒமேகா-3, குறிப்பாக DHA ஆன டோகோசா ஹெக்ஸெனாயிக் அமிலம், குழந்தையின் வளரும் மூளைக்கு ஒரு கட்டுமானத் தொகுதி போன்றதாகும். இந்த அமிலம் வலுவான நரம்பியல் இணைப்புகளை உருவாக்க உதவுகிறது
குறைப்பிரசவ அபாயத்தைக் குறைக்க
சில ஆய்வுகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குறைப்பிரசவ அபாயத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது
குழந்தையின் கண் ஆரோக்கியத்திற்கு
குழந்தையின் கண்களின் வளர்ச்சியில் DHA ஆன டோகோசா ஹெக்ஸெனாயிக் அமிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை குழந்தை வளரும் போது சிறந்த பார்வை மற்றும் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
வீக்கத்தைக் குறைப்பதற்கு
ஒமேகா-3களில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. எனவே, இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் வீக்கம் வீக்கம் மற்றும் அசௌகரியத்தைக் குறைக்க உதவுகிறது
குறிப்பு
கர்ப்ப காலத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உயர்தர ஒமேகா-3 சப்ளிமெண்ட்களைத் தேர்வு செய்ய வேண்டும். எனினும், கர்ப்ப காலத்தின் போது எந்தவொரு புதிய சப்ளிமெண்ட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக மருத்துவரை அணுகி, அது பாதுகாப்பானதாக என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்