ஐஸ் ஆப்பிள் அல்லது நுங்கு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. ஆனால், கர்ப்பிணி பெண்கள் நுங்கு சாப்பிடலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். கர்ப்பிணி பெண்கள் நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
ஊட்டச்சத்துக்கள்
நுங்குவில் கால்சியம், கார்போஹைட்ரேட்டுகள், பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் இன்னும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன
நச்சுக்களை வெளியேற்ற
கர்ப்ப காலத்தில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதுடன் சுத்தமாக செயல்பட உதவுகிறது. இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் சத்துக்கள் கர்ப்ப காலத்தில் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது
மலச்சிக்கல்லைத் தடுக்க
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்க நுங்கு உதவுகிறது. இது வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் சிறந்த தீர்வாக அமைகிறது
செரிமானத்தை சீராக்க
கர்ப்பிணி பெண்களுக்கு செரிமான பிரச்சனைகள் அதிகமாக இருக்கலாம். இதனைத் தவிர்க்க சரியான அளவில் நுங்குவை எடுத்துக் கொள்ளலாம்
நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது அவசியமாகும். இவை கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் நல்ல பலனைத் தருகிறது
சரும பிரச்சனை தவிர்க்க
கர்ப்பிணி பெண்கள் சொறி, அரிப்பு, சிவத்தல் போன்ற பிரச்சனைகளைச் சந்திப்பர். இவற்றைத் தவிர்க்க பெண்கள் நுங்குவை எடுத்துக் கொள்ளலாம். அரிப்பு இருக்கும் இடத்தில் நுங்குவை பயன்படுத்தலாம்
எப்போது சாப்பிடலாம்?
கர்ப்பிணி பெண்கள் காலை உணவுக்குப் பிறகு நுங்குவை எடுத்துக் கொள்ளலாம். நண்பகலுக்குப் பிறகு தவிர்க்க வேண்டும். எனினும், மிதமான அளவு உட்கொள்வது ஆஓக்கியமானது
கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிடுவது இது போன்ற ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. எனினும் கர்ப்பிணிகள் மருத்துவ ஆலோசனையின் பெயரில் நுங்குவை எடுத்துக் கொள்வது நல்லது