கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தை இருவரின் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது அவசியமாகும். கர்ப்பிணி பெண்கள் தேங்காய் தண்ணீர் குடிக்கலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். கர்ப்ப காலத்தில் தேங்காய் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள் குறித்து காணலாம்
நீரேற்றமாக வைத்திருக்க
தேங்காய் நீரில் ஹைட்ரேட்டிங் ஏஜெண்டுகள் நிறைந்துள்ளது. இது அவர்களின் உடலை நீரேற்றமடையச் செய்கிறது
ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனைக்கு
கர்ப்ப காலத்தில் பெண்கள் நெஞ்செரிச்சல் மற்றும் வலியை அனுபவிக்கின்றனர். இது உடலில் அமில அளவுகள் அதிகரிப்பதால் ஏற்படுகிறது. இந்நிலையிலிருந்து விடுபட தேங்காய் நீர் சிறந்த தீர்வாக அமைகிறது
கரு வளர்ச்சிக்கு நன்மை தர
தேங்காய் நீரில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் கருவளர்ச்சிக்கு உதவுகிறது. தேங்காய் நீரை கர்ப்பிணி பெண்கள் அருந்துவது கருவை வேகமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது
இரத்த அழுத்தத்தைக் குறைக்க
கர்ப்பிணி பெண்கள் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திப்பர். இதிலிருந்து விடுபட தேங்காய் நீர் உதவுகிறது. இது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது
சரியான ஊட்டச்சத்தை வழங்க
கர்ப்பிணி பெண்கள் தேங்காய் நீர் அருந்துவது உடலில் உள்ள அனைத்து தசை திசுக்களுக்கும் சரியான ஊட்டச்சத்தை வழங்குகிறது. மேலும் உடல் வலிமை மற்றும் மன அமைதியைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது
கர்ப்பிணி பெண்கள் தேங்காய் தண்ணீர் அருந்துவது உடல் நலத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். எனினும் மருத்துவ ஆலோசனையின் படி, கர்ப்ப காலத்தில் தேங்காய் தண்ணீர் அருந்துவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்