கர்ப்பிணி பெண்களே! முலாம்பழம் சாப்பிட்டு மட்டும் பாருங்க!

By Karthick M
04 Oct 2024, 18:15 IST

கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான உணவு முறையைக் கையாள வேண்டும். இதற்கு முலாம்பழம் பெரிதும் உதவியாக இருக்கும்.

நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்

கர்ப்பிணிகளின் உடலில் நிலையான மாற்றங்களுக்கு உதவும் வகையிலான ஊட்டச்சத்துக்கள் முலாம்பழத்தில் நிறைந்துள்ளது.

முக்கிய சத்துக்கள்

முலாம்பழத்தில் பல்வேறு முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளன.

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள்

கருவின் ஆரோக்கியமான திசுக்களின் வளர்ச்சிக்கு முக்கியமான சத்துக்கள் முலாம்பழத்தில் உள்ளது. மேலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இரத்தம் உறைவதைத் தடுக்கும் பண்புகளும் உள்ளது.

இரத்த சோகை பிரச்சனை

கர்ப்ப காலத்தில் இரத்த சோகை பிரச்சனையை தீர்க்க வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி

முலாம்பழத்தில் கரோட்டினாய்டுகள் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்படுகிறது. இவை உடலில் ஃப்ரீ ரேடிக்கல்கள் உருவாவதைத் தடுக்கிறது.