புல்லட் வேகத்தில் எடை குறைய டின்னருக்குப் பின் இந்த ட்ரிங்ஸ் குடிங்க

By Gowthami Subramani
08 Apr 2025, 21:48 IST

இரவு உணவுக்குப் பிறகு நாம் உறங்கினாலும், உடல் வேலை செய்வதை நிறுத்தாது. இதில் உடல் எடையிழப்பும் அடங்கும். அவ்வாறு இரவு உணவுக்குப் பின் நாம் அருந்தும் சில பானங்கள் செரிமானத்தை ஆதரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இவை ஒரே இரவில் கொழுப்பை எரிக்க உதவுகிறது

வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்

இரவு உணவிற்குப் பிறகு, சூடான எலுமிச்சை நீர் அருந்துவது கல்லீரலை நச்சு நீக்குகிறது. மேலும் இது pH-ஐ சமநிலைப்படுத்தவும், கொழுப்பு சேமிப்பைத் தடுக்கவும் உதவுகிறது. அதிகபட்ச நன்மைகளைப் பெற இதில் தேன் சேர்த்துக் கொள்ளலாம்

இலவங்கப்பட்டை தேநீர்

இலவங்கப்பட்டை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இது நள்ளிரவு சிற்றுண்டிகளைக் கட்டுப்படுத்த ஏதுவாக அமைகிறது. தண்ணீரில் ஒரு இலவங்கப்பட்டையைச் சேர்த்து கொதிக்க வைக்கவும் அல்லது எடையிழப்பு பானமாக இலவங்கப்பட்டை தூளைப் பயன்படுத்தலாம்

வெந்தய நீர்

ஊறவைத்த வெந்தய நீர் அருந்துவது பசியைப் பராமரிக்கிறது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், இரவு உணவுக்குப் பிறகு ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இது எடை மேலாண்மைக்கு ஏற்றதாகும்

கெமோமில் டீ

கெமோமில் டீ அருந்துவது நல்ல தூக்கத்தைத் தருவதுடன், செரிமானத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இது தூங்கும் போது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது. இதன் மூலம் உடல் எடையிழப்பை ஆதரிக்கலாம்

சீரக நீர்

சீரகம் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதற்கு ஒரு டீஸ்பூன் சீரகத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, பின்னர் கொதிக்க வைக்க வேண்டும். இரவு உணவுக்குப் பிறகு இதை சூடாக அருந்துவது கொழுப்பை எரிக்க உதவுகிறது

ஏன் இரவு உணவுக்குப் பின்?

இரவு நேரத்தில் வளர்ச்சிதை மாற்றம் மெதுவாக நடக்கும். இந்நிலையில், இரவு உணவுக்குப் பின் இந்த பானங்களை எடுப்பது உடல் தூக்கத்தில் இருக்கும் போதும் சில கலோரிகளை எரிக்க உதவுகிறது

இரவில் இந்த பானங்கள் அருந்துவதை பழக்கமாக்கிக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். மேலும், இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது