உடல் எடையை குறைக்க பலர் உப்பை முழுவதுமாக கைவிடுகிறார்கள். ஆனால் உண்மையாகவே உப்பு சாப்பிடுவதை கைவிட்டால் உடல் எடை குறையுமா என்பதை பார்க்கலாம்.
உப்பை கைவிடுவது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சில நாட்கள் உப்பு சேர்க்காத உணவை உண்பதால் உடல் எடை வேகமாக குறையும்.
உப்பு உடலில் நீரை தக்க வைக்கிறது. எனவே, உப்பை நீண்ட நேரம் உட்கொள்ளாமல் இருந்தால், உடலில் இருந்து தண்ணீர் வெளியேறத் தொடங்குகிறது.
ஆனால் உப்பை உடனே கைவிடக் கூடாது, படிப்படியாக கைவிட்டுவிட்டு மீண்டும் அதை மெதுமெதுவாக சேர்க்க ஆரம்பிக்க வேண்டும்.
காரணம் உடலுக்கு பிற சத்துக்கள் கொண்ட உணவு எப்படி முக்கியமோ அதே அளவு உப்பும் முக்கியம் என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.