உடல் எடையைக் குறைக்க இந்த விளையாட்டுகளை விளையாடுங்க

By Gowthami Subramani
23 Aug 2024, 09:21 IST

அன்றாட வாழ்வில் நாம் விளையாடும் சில விளையாட்டுகளின் உதவியுடன் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம். இதில் உடல் எடை குறைய உதவும் விளையாட்டுக்களைக் காணலாம்

டென்னிஸ்

டென்னிஸ் விளையாட்டு விளையாடுவதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 300 கலோரிகளுக்கு மேல் எரிக்கலாம். இது உடலில் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது

நீச்சல்

ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் நீச்சல் அடிப்பதன் மூலம் 400 கலோரிகள் வரை குறைக்கமுடியும். இது உடலை வலுவாக்கவும், தசைகளை வலுவாக்கவும் உதவுகிறது

சைக்கிள் ஓட்டுதல்

உடல் எடை குறைப்பு, தசைகளை வலுப்படுத்துதல் மற்றும் உடலை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை சைக்கிள் ஓட்டுதல் மூலம் பெறலாம்

பூப்பந்து

பூப்பந்து விளையாடுவது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் 300 கலோரிகளை எரிக்க உதவுகிறது

கூடைப்பந்து

கூடைப்பந்து விளையாட்டில் உடலின் பல்வேறு பகுதிகள் அசைவுகளில் இருக்கும். இது தசைகளின் தொனியை மேம்படுத்தவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது

கால்பந்து

உடலின் கீழ் பாகங்களை வலுப்படுத்த கால்பந்து உதவுகிறது. இவை எளிதில் கலோரிகளை எரிக்க உதவுகிறது

பளு தூக்குதல்

இதயத்துடிப்பை அதிகரித்து கலோரிகளை எரிக்க உதவும் அதிக தீவிரம் கொண்ட கார்டியோ பயிற்சியாக பளு தூக்குதல் அமைகிறது.