எகிறும் எடையை வேகமாக குறைக்க இந்த மூலிகைகள் எடுத்துக்கோங்க!

By Gowthami Subramani
27 Aug 2024, 21:57 IST

உடல் எடையைக் குறைக்க வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், கொழுப்பு எரிவதைத் துரிதப்படுத்துவதும் அவசியமாகும். அதன் படி, உடல் எடையைக் குறைக்க உதவும் சில மூலிகைகளைக் காணலாம்

வெந்தயம்

உடல் எடையைக் குறைக்க இது சிறந்த மூலிகையாகும். இதன் நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நம்மை முழுமையாக உணர வைப்பதுடன், உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது

இலவங்கப்பட்டை

உணவில் இலவங்கப்பட்டை சேர்த்துக் கொள்வது பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது

சீரகம்

இவை உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இவை கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது

கருமிளகு

இதில் உள்ள பைபரைன் சேர்மங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கொழுப்பு சேமிப்பைக் குறைக்கிறது. இவை ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

பூண்டு

இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சிறந்த மூலிகை ஆகும். இவை உடலில் நச்சுத்தன்மையை நீக்கவும், கொழுப்பு சேமிப்பைக் குறைக்கவும், இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் உதவுகிறது

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் என்ற கலவை நிரம்பியுள்ளது. இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் வீக்கத்தைக் குறைக்கவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது

அஸ்வகந்தா

இந்த மூலிகை உடல் எடையைக் குறைக்க உதவும் சிறந்த மூலிகையாகும். இதன் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது