வயிற்றை சுற்றி கொழுப்பு தேங்கியிருக்கா? இந்த பானங்களை ட்ரை பண்ணுங்க..

By Ishvarya Gurumurthy G
19 Feb 2024, 17:27 IST

வயிற்றைச் சுற்றி கொழுப்பு தேங்கியிருக்கிறதா? காலையில் இந்த பானங்களை குடித்தால் மட்டும் போதும். வெண்ணெய் போல் கொழுப்பு கரையும்.

கிரீன் டீ

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த பானம் என்று கூறப்படுகிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் எடையைக் குறைக்கவும் வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து சிறிது தேன் சேர்க்கவும். அந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இந்த பானம் உங்கள் குடல்களை சுத்தம் செய்ய உதவுகிறது.

இஞ்சு தண்ணீர்

ஒரு சிறிய துண்டு இஞ்சியைத் தட்டி, ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து, இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் காலையில் வாய் கொப்பளித்து இந்த நீரை குடிக்கவும். இஞ்சி நீர் எடையைக் குறைக்கவும், வயிற்றைச் சுற்றி கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.

மஞ்சள் பால்

இந்த பானம் உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள், சிறிது இஞ்சி மற்றும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் சேர்த்து குடிக்கவும்.

இலவங்கப்பட்டை மற்றும் தேன்

தேன் மற்றும் சிறிதளவு இலவங்கப்பட்டை பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் சாப்பிட்டால், தொப்பையை கரைப்பது மட்டுமல்லாமல், சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை மற்றும் இஞ்சி

ஒரு எலுமிச்சையை எடுத்து அதன் சாற்றை ஒரு பாத்திரத்தில் பிழியவும். ஒரு துண்டு புதிய இஞ்சியை எடுத்து, அதை தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். இப்போது பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும். சிறிது தேன் சேர்த்து சூடாக குடிக்கவும். இந்த பானத்தை குடிப்பதால் கொழுப்பு எளிதில் கரையும்.