தொப்பை கொழுப்பைக் குறைப்பதற்கான சிறந்த மற்றும் மிகவும் பயனுள்ள வழியாக சில ஆரோக்கியமான பானங்களை எடுத்துக் கொள்ளலாம். இதில் தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவும் பானங்களைக் காணலாம்
அஜ்வைன் தண்ணீர்
இந்த நீர் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இது செரிமானத்தை மேம்படுத்தி, இயற்கையாகவே தொப்பையைக் குறைக்க உதவுகிறது
இஞ்சி டீ
இஞ்சி டீ அருந்துவது பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இவை உடலில் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கொழுப்பை எரிக்கும் செயல்முறைகளை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது
சீரக தண்ணீர்
இவை உடலில் செரிமானத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. குறிப்பாக, சீரகத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடிவயிற்றில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது
துளசியுடன் கிரீன் டீ
இந்தக் கலவையானது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. துளசியுடன் கூடிய கிரீன் டீ ஆனது உடலில் கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கிறது
தேன் நிறைந்த எலுமிச்சை நீர்
வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பு இழப்புக்கும் உதவுகிறது