உடல் எடை குறைய தண்ணீரை சரியாக குடிப்பதே பெரிதும் உதவியாக இருக்கும். உடல் எடை குறைய எப்போது தண்ணீர் குடிக்கலாம் என பார்க்கலாம்.
தினசரி காலை எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பது உடல் எடை குறைப்பது முதல் உடலில் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
உணவையும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடிக்கவும். இது பசியைக் கட்டுப்படுத்துகிறது.
உடற்பயிற்சி செய்யும் போது கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். எலக்ட்ரோலைட் தண்ணீர் அல்லது வெற்று நீரை எடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் உணவை சரியான நேரத்தில் சாப்பிட்டாலும் தொடர்ந்து பசியை உணர்ந்தால், ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.