உலர் திராட்சை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது. இதை பச்சையாக சாப்பிடுவதை விட, ஊறவைத்து சாப்பிட்டால் பல நன்மைகளை பெறலாம். இது எடை குறைப்பில் இருந்து மலசிக்கல் வரை பல பிரச்சினைக்கு நல்லது. எடை குறைப்புக்கு திராட்சையை எப்படி சாப்பிட வேண்டும் என பார்க்கலாம்.
ஆரோக்கிய நன்மை
திராட்சையில் நல்ல அளவு புரதம், இரும்பு மற்றும் நார்ச்சத்து உள்ளது. எனவே, இதை தினமும் சரியான அளவில் உட்கொள்வதன் மூலம், உடலுக்கு பல நன்மைகளை பெறலாம்.
ஊட்டச்சத்து குறைபாடு
திராட்சையை சரியான முறையில் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள வைட்டமின் B6, கால்சியம், பொட்டாசியம் மற்றும் தாமிரச் சத்துக்களின் குறைபாட்டைப் பூர்த்தி செய்யலாம்.
எப்படி சாப்பிடுவது?
திராட்சையை நேரடியாகவும் உண்ணலாம். ஆனால், பச்சையாக உண்பதை விட அதை ஊறவைப்பது சாப்பிடுவதால் இன்னும் அதிகமான பலனை பெறலாம்.
வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்
உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் எழுந்து வெறும் வயிற்றில் ஊறிய திராட்சையை சாப்பிடுங்கள். அத்துடன், ஊறவைத்த தண்ணீரையும் குடிக்கலாம்.
ஹீமோகுளோபின் அதிகரிக்கும்
திராட்சையை இவ்வாறு உட்கொள்வதால் இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். இதனுடன், ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கவும் உதவும்.
எவ்வளவு சாப்பிடணும்?
திராட்சை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். அதே நேரத்தில், அதன் அதிகப்படியான நுகர்வு காரணமாக உடல் பருமன் அதிகரிக்கும். எனவே, தினமும் 5-10 திராட்சைகளை மட்டுமே உட்கொள்வது நல்லது.
எடையை குறைக்க
ஊறவைத்த திராட்சையை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும், இது பற்கள் மற்றும் ஈறுகளின் உள்ள துவாரங்களை அகற்றவும் உதவும்.
கண்களுக்கு நல்லது
ஊறவைத்த திராட்சையில் பாலிஃபீனாலிக் பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன. அவை கண் தசைகளில் ஏற்படும் சிதைவை தடுப்பதன் மூலம் உங்கள் பார்வையை மேம்படுத்துகின்றன.