உடல் எடை குறைய வால்நட்ஸை இப்படி சாப்பிடுங்க!!

By Devaki Jeganathan
09 Jun 2024, 10:40 IST

ஆரோக்கியமாக இருக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் நாம் பலவற்றை உணவில் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், அவை சரியான நேரத்திலும் முறையிலும் சாப்பிடும்போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். அந்தவகையில், உடல் எடை குறைய வால்நட்ஸை எப்படி சாப்பிடணும் என பார்க்கலாம்.

வால்நட்ஸ் பண்புகள்

ஒமேகா 3 உடன், வால்நட்ஸ் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ போன்ற பண்புகள் உள்ளன, அவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

எடை இழப்பு

உடல் எடையை குறைக்க வால்நட்ஸை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உடலை கட்டுக்கோப்பாக வைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்தும்

வால்நட்ஸ் பருப்பை உணவில் சேர்த்துக்கொள்வது செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் உடல் பருமன் பிரச்சனையை குறைக்க உதவுகிறது.

இரத்த சர்க்கரை

அக்ரூட் பருப்புகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. தவிர, இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

எப்படி சாப்பிடணும்?

வால்நட்ஸ் சாப்பிடுவதற்கு முன்பு எப்போதும் ஊறவைக்க வேண்டும். அக்ரூட் பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடுங்கள்.

உடல் சூடு குறையும்

அக்ரூட் பருப்பை ஊறவைத்த பின் சாப்பிடுவதால் அதன் சூடு குறைகிறது. மேலும், செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை எளிதாக சாப்பிடலாம்.

ஆற்றல் அதிகரிக்கும்

காலையில் வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவது உடலில் சக்தியை பராமரிக்கிறது. இதனால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, இரவில் நல்ல தூக்கமும் கிடைக்கும்.