உடல் எடை குறைப்புக்கு வாழைப்பழம் அரிய வகை பழமாகும். உடல் எடையை குறைக்க வாழைப்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க விரும்பினால், வேகவைத்த வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தை சாப்பிடும் முன் ஆவியில் வேகவைத்து பின் சாப்பிட வேண்டும்.
வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. எனவே இதை சாப்பிடுவதால் விரைவில் பசி ஏற்படாது. வாழைப்பழம், பால் சாப்பிடுவது கூடுதல் சிறப்பு.
உடல் எடையை குறைக்க விரும்பினால் தினசரி இரண்டு வாழைப்பழம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதிக வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.
இதில் கலோரிகள், நார்ச்சத்துக்கள் அதிகம். இது வயிற்றை நிரப்புகிறது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும், எடையை கட்டுக்குள் வைத்திருக்க இது உதவும்.