உடல் எடை குறைக்க விரும்பினால் இந்த பழங்கள் சாப்பிடவேக் கூடாது!

By Karthick M
20 Apr 2025, 21:21 IST

எடை குறைப்பில் பழங்கள் மிகுந்த நன்மை பயக்கும். ஆனால் எடை குறைக்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட பழங்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

அன்னாச்சிப்பழம்

அன்னாச்சிப்பழத்தில் அதிகளவிலான சர்க்கரை நிறைந்துள்ளது. இது இயற்கை சர்க்கரை, உடலில் கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கும். இவை எடை இழப்பு இலக்குகளைப் பாதிக்கலாம்.

வாழைப்பழங்கள்

மற்ற பழங்களை விட இதில் இயற்கை சர்க்கரைகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது. எனவே வாழைப்பழங்களை மிதமாக உட்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும்.

உலர்ந்த பழங்கள்

உலர்ந்த பழங்கள், திராட்சை, பேரீச்சம்பழம், ஆப்ரிகாட் போன்றவை கலோரிகள் நிறைந்த பழங்களாகும். இதன் அதிக கலோரி உடல் எடை குறைப்பைப் பாதிக்கிறது.

அவகேடோ

அவகேடோ அல்லது வெண்ணெய் பழம் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த பழமாகும். எனினும் இது அதிகளவு கலோரிகளைக் கொண்டுள்ளது.

மாம்பழம்

இதில் அதிகளவு சர்க்கரை உள்ளது. அதிக கலோரி நுகர்வுக்கு பங்களிப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தவிர்ப்பது நல்லது.