உடல் எடையைக் குறைக்கவும், தசைகளை மீட்டெடுக்கவும் உடற்பயிற்சிக்குப் பிறகு சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும். இதில் எடையைக் குறைக்க உடற்பயிற்சிக்குப் பின் சாப்பிட வேண்டிய உணவுகள் சிலவற்றைக் காணலாம்
முட்டை
முட்டைகள் உயர்தர புரதங்கள் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்ததாகும். இது உடல் எடையைக் குறைக்கவும், தசைகளைப் பழுதுபார்க்கவும் உதவுகிறது
ஓட்ஸ்
இது நீடித்த ஆற்றலை வழங்கக் கூடிய மற்றும் அதிக நார்ச்சத்துக்களைத் தரக்கூடிய உணவாகும். மேலும் இது வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால் பசியைக் குறைத்து உடல் எடை இழப்பை ஆதரிக்கிறது
சீஸ்
இது குறைந்த அளவிலான கலோரிகள் மற்றும் அதிக புரோட்டீன் நிறைந்ததாகும். இது தசை மீட்சிக்கு பெரிதும் உதவுகிறது. இதை உட்கொள்வது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
கிரேக்க தயிர்
தயிர் புரதம் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுப் பொருளாகும். இது தசைகளை மீட்டெடுக்கவும், டல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையிழப்பை ஊக்குவிக்கலாம்
வெஜிடபிள் சாலட்
உடற்பயிற்சிக்கு பின் தக்காளி, வெங்காயம், கேரட், பீட்ரூட் மற்றும் வெள்ளரி போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். இது உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்களை வழங்குகிறது