எப்பேற்பட்ட தொப்பையையும் அசால்ட்டாக குறைக்கும் ப்ரோக்கோலி ரெசிப்ஸ்

By Gowthami Subramani
06 Jan 2025, 19:30 IST

உடல் எடையைக் குறைப்பதில் சரியான உணவுமுறையைக் கையாள்வது மிகவும் அவசியமாகும். அவ்வாறு, எடை குறைய ப்ரோக்கோலி பெரிதும் உதவுகிறது. இது நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியதாகும். இதில் எடை குறைய ப்ரோக்கோலி சாப்பிடும் முறைகளைக் காணலாம்

ப்ரோக்கோலி சூப்

பூண்டு, வெங்காயம் மற்றும் சில காய்கறிகள் போன்றவற்றுடன் ப்ரோக்கோலியை வேகவைத்து, அதை சூப்பாக எடுத்துக் கொள்ளலாம். இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

ப்ரோக்கோலி ஃபிரை

ஆலிவ் எண்ணெய், பூண்டு மற்றும் பிடித்த மசாலப் பொருள்களுடன் ப்ரோக்கோலியை வறுக்க வேண்டும். இந்த சுவையான, குறைந்த கலோரிகள் நிறைந்த உணவு, தொப்பை கொழுப்பை எரிக்க உதவுகிறது

ப்ரோக்கோலி ஸ்மூத்தி

ஆப்பிள், கீரை மற்றும் ஒரு துளி எலுமிச்சையுடன் ப்ரோக்கோலியைக் கலந்து ஸ்மூத்தியைத் தயார் செய்யலாம். இந்த ஸ்மூத்தியைக் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் நச்சு நீக்கியாக செயல்படுகிறது

ப்ரோக்கோலி சாலட்

ப்ரோக்கோலியை வேகவைத்து கொண்டைக்கடலை, தக்காளி மற்றும் லைட் ஆலிவ் ஆயில் டிரஸ்ஸிங் சேர்த்து சாலட்டைத் தயார் செய்யலாம். இது கொழுப்பை எரிக்க உதவுகிறது

ப்ரோக்கோலி மற்றும் குயினோவா

வேகவைத்த ப்ரோக்கோலி, வெண்ணெய் பழம் மற்றும் எலுமிச்சைப் பழம் போன்றவற்றை சமைத்த குயினோவாவில் கலந்து சாப்பிடலாம். இது எடையைக் குறைக்க உதவுகிறது