வேகமாக எடை குறைய ராகியை இப்படி சேர்த்துக்கோங்க

By Gowthami Subramani
06 Feb 2025, 16:27 IST

ராகி பல்வேறு தாதுப்பொருள்கள் நிறைந்த தானியம் ஆகும். இதில் கால்சியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் எடை குறைய ராகியை எடுத்துக் கொள்வதற்கான சில எளிய வழிகளைக் காணலாம்

ராகி ரொட்டி

ராகி மாவைப் பயன்படுத்தி ரொட்டி அல்லது பிளாட்பிரெட் தயாரிக்க பயன்படுத்தலாம். முழு கோதுமை மாவுடன் ராகியைச் சேர்ப்பது சுவையுடன் கூடிய ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதை சமச்சீர் உணவாக காய்கறிகள் அல்லது கறியுடன் சேர்க்கலாம்

ராகி மாவு கஞ்சி

சத்தான ராகி கஞ்சியுடன் நாளைத் தொடங்குவது சிறந்த தேர்வாகும். ராகி மாவை தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து, வெல்லம் அல்லது தேன் போன்ற இனிப்புப் பொருளைச் சேர்த்து கெட்டியாகும் வரை சமைக்க வேண்டும். இது எடையைக் குறைப்பதற்கான சிறந்த தேர்வாகும்

ராகி ஸ்மூத்தி

தயிர், பால் மற்றும் பழங்களுடன் ராகி மாவைச் சேர்த்து ஸ்மூத்தியைத் தயார் செய்யலாம். இதை உடற்பயிற்சிக்குப் பிறகு ஒரு சிறந்த பானமாகவோ அல்லது ஆரோக்கியமான சிற்றுண்டியாகவோ எடுத்துக் கொள்ளலாம்

ராகி குக்கீகள் அல்லது பான்கேக்குகள்

ராகி மாவை முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தி ராகி குக்கீகள் அல்லது பான்கேக்குகளைத் தயார் செய்யலாம். இதில் நட்ஸ் மற்றும் விதைகள் போன்ற பொருட்களைச் சேர்ப்பது கூடுதல் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது

ராகி இட்லி அல்லது தோசை

இட்லி அல்லது தோசை தயாரிக்க அரிசியை ராகி மாவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கலவையை புளிக்க வைத்து எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைப்பதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது

இவ்வாறு பல்வேறு ஆரோக்கியமான மற்றும் எளிய வழிகளில் ராகியை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் எடை குறைப்பை இயற்கையாகவே ஆதரிக்கிறது. மேலும் இதன் ஊட்டச்சத்துக்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது