வேக வேகமா வெயிட் லாஸ் செய்ய இந்த காய்கறிகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

By Gowthami Subramani
13 May 2025, 16:59 IST

காய்கறிகள் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல், இவை ஒரு நபர் அதிகளவு உணவு உட்கொள்வதை கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இதில் அதிகளவு நீர்ச்சத்து இருப்பதால், இவை வயிற்றை விரைவாக நிரப்பி எடையைக் குறைக்க உதவுகிறது

சாப்பிட வேண்டிய காய்கறிகள்

அன்றாட உணவில் இது போன்ற காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். இதில் எடையைக் குறைக்க உதவும் சில உணவுகளைக் காணலாம்

பூசணி

இதில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதை உட்கொள்வதால் மனநிறைவு உணர்வு அதிகரிக்கிறது. இது பசி ஏற்படுவதைக் குறைக்கிறது. எனவே இது எடை இழப்புக்கு ஏற்ற காய்கறியாக அமைகிறது

கேரட்

கேரட் எடையிழப்புக்கு குறைந்த கலோரி கொண்ட காய்கறிகளில் ஒன்றாகும். எடையைக் குறைக்க கேரட் சாறு குடிக்கலாம், சாலட்டாக சாப்பிடலாம் அல்லது வேகவைத்து சாப்பிடலாம்

காளான்

காளான்களில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எடையைக் குறைக்க உதவும் ஆற்றலைக் கொண்டுள்ளது

வெள்ளரிக்காய்

இது அதிகளவு நீர்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதை உட்கொள்வது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு உதவுகிறது. வெள்ளரிக்காய் சாற்றை தொடர்ந்து குடிப்பதன் மூலம் விரைவான கொழுப்பு இழப்பு ஏற்படுகிறது

ப்ரோக்கோலி

இது தாதுக்கள் மற்றும் வைட்டமின்களுடன் உயர்தர நார்ச்சத்து நிறைந்ததாகும். மேலும் கூடுதலாக, ப்ரோக்கோலியில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் கொழுப்பை எரிக்க உதவுகிறது

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகளில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளன, எனவே அவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது கொழுப்பை விரைவாக எரிக்க உதவுகிறது.