மடமடனு எடை குறைய லெமன் வாட்டரை இப்படி குடிங்க

By Gowthami Subramani
16 Mar 2025, 17:23 IST

எடை குறைய எலுமிச்சை நீர்

எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு எலுமிச்சை நீர் சிறந்த தேர்வாக அமைகிறது. சர்க்கரை நிறைந்த குளிர் பானங்களுக்கு பதிலாக எலுமிச்சை நீரை அருந்தலாம். ஆனால், உடல் எடையைக் குறைக்கவும், எலுமிச்சை நீரின் அதிகபட்ச நன்மைகளைப் பெறவும் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து காணலாம்

குறைந்த கலோரி பானமாக

அரை எலுமிச்சைச் சாறுடன் ஒரு கிளாஸ் நீரில் குறைந்த அளவிலான கலோரிகளே நிறைந்துள்ளது. குறிப்பாக, சர்க்கரை இல்லாமல் இதை உட்கொள்வது எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது

எளிய பானம்

எலுமிச்சைத் தண்ணீர் அருந்துவது உடல் எடை இழப்புக்கு மிகவும் எளிதான பானமாக அமைகிறது. எந்த சோம்பலும் இல்லாமல் எளிய வழியில் இதைத் தயார் செய்யலாம்

கூடுதல் பொருள்களைச் சேர்ப்பது

எலுமிச்சைத் தண்ணீரின் சுவையை அதிகரிக்க விரும்பினால், அதில் புதினா இலைகள் மற்றும் மெல்லிய எலுமிச்சை துண்டுகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்

சுத்தமான நீரைப் பயன்படுத்துவது

எலுமிச்சைத் தண்ணீரைத் தயார் செய்வதற்கு எப்போதும் வடிகட்டிய, சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துவது அவசியமாகும். எலுமிச்சை சேர்ப்பது தண்ணீர் சுத்தமாகும் என நினைப்பது தவறு

நேரடியாக குடிப்பதை தவிர்ப்பது

எலுமிச்சை சாற்றை நேரடியாக குடிப்பதைத் தவிர்க்கவும். மாறாக, இதைத் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். ஏனெனில், எலுமிச்சை சாற்றை நேரடியாகக் குடிப்பது பற்களின் எனாமலை சேதப்படுத்தலாம்

மசாலாப் பொருள்களைத் தவிர்ப்பது

எலுமிச்சை நீரின் சுவையை அதிகரிக்க, அதில் உப்பு அல்லது சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இது பானத்தின் முழு பலனையும் தராமல், உடலில் கலோரிகளையும் அதிகரிக்கிறது

வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரைக் குடிக்க முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அருந்துவது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது நாள் முழுவதும் சக்தியுடன் இருக்க உதவுகிறது