உடல் எடை குறைய பலரும் அவதிப்படும் நிலையில் சிலருக்கு திடீரென உடல் எடை அதிகளவு அதிகரிக்கும். இதற்கான காரணத்தை அறிந்துக் கொள்ளலாம்.
அதிக உப்பு உட்கொள்ளல்
உப்பை அதிகம் உட்கொள்வது உடல் எடையைஅதிகரிக்கும். அதிகப்படியான உப்பை உட்கொள்வது எடை அதிகரிப்பு மற்றும் உடலில் நீர் தேக்கத்திற்கு வழிவகுக்கும்.
அதிகப்படியான கார்போஹைட்ரேட்
கார்ப் நிறைந்த இரவு உணவை சாப்பிட்டால் அல்லது தொடர்ந்து 1-2 நாட்களாக உங்கள் உணவில் வழக்கத்தை விட அதிக கார்போஹைட்ரேட்டுகளை உட்கொண்டால், உங்கள் எடையையும் பாதிக்கும்.
அஜீரணம்
வயிறு சுத்தமாக இல்லாவிட்டாலும் எடை கணிசமாக அதிகரிக்கும். மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டு பல பிரச்சனைக்கு வழிவகுக்கும். இது பல உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தும்.
மன அழுத்தம்
திடீர் எடை அதிகரிப்புக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம். மன அழுத்தம் உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தி எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.