தொப்பைக் கொழுப்பை அசால்ட்டாக குறைக்க உதவும் மசாலாக்கள்

By Gowthami Subramani
08 Jul 2024, 09:00 IST

தொப்பைக் கொழுப்பைக் குறைக்க சில மசாலாப் பொருட்கள் உதவுகிறது. இந்த மசாலாப் பொருள்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை எரிக்கும் மற்றும் பசியை அடக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது

கருமிளகு

இந்த காரமான உணவில் பைபெரின் என்ற பொருள்கள் நிறைந்துள்ளது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உடலில் வெப்ப உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது

இஞ்சி

இஞ்சியில் உள்ள செரிமான பண்புகள் உடலில் உள்ள வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடலில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது

பூண்டு

பூண்டில் அல்லிசின் என்ற சேர்மம் உள்ளது. இது உடல் எடை மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் ஆனது அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும். இது இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இவை உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

சீரகம்

சீரகம் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், கூடுதல் கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. இந்த உணவுகளுடன் சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் இணைப்பது செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை உட்கொள்ளல் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதற்கும், இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும் உதவுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்தவும், உடல் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது