ஒரே வாரத்துல 5 கிலோ வரை எடை குறைய இந்த புரத உணவுகளைச் சாப்பிடுங்க

By Gowthami Subramani
29 Jan 2024, 06:44 IST

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு புரதங்கள் சிறந்த தேர்வாகும். புரதங்கள் கொழுப்பை மட்டும் கரைத்து, தசை வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. இவை நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது

பாசிப்பருப்பு தோசை

பாசிப்பருப்பு புரதச்சத்து மிகுந்த பருப்பு ஆகும். இதனுடன் சீரகத்தை சேர்த்து பாசிப்பருப்பு தோசையை உணவாக எடுத்துக் கொள்ளலாம். இது உடல் எடை இழப்புக்கு உதவுகிறது

சிவப்பு அவல் கிச்சடி

சிவப்பு அவல், முளைகட்டிய பாசிப்பயறு, கேரட், பீன்ஸ் மற்றும் இன்னும் சில உணவுப் பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கிச்சடி உடல் எடை குறைய சிறந்த உணவாகும்

ராகி பவுடர்

ராகி, கம்பு தூளுடன் தேங்காய், மிளகுத் தூள் போன்றவற்றைச் சேர்த்து தயார் செய்யப்படும் உணவு உடல் எடை இழக்கும் நபர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது

பாசிப்பயறு பனீர் சாலட்

முளைகட்டிய பாசிப்பயறுடன் பனீர் சேர்த்து தயாரிக்கப்படும் பாசிப்பயறு பனீர் சாலட் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த புரத உணவாகக் கருதப்படுகிறது

சியா-ஓட்ஸ் ஸ்மூத்தி

இவை இரண்டுமே உடல் எடை இழப்புக்கு உதவும் சிறந்த உணவாகும், சியா விதைகள், ஓட்ஸ், பாதாம், வாழைப்பழம் போன்றவற்றைச் சேர்த்து தயார் செய்யப்படும் ஸ்மூத்தியானது உடல் எடை இழப்புக்கு உதவுகிறது

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்த புரத உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்