உடல் எடை இழப்பிற்கு கூடுதல் கலோரிகளைக் குறைக்க சில ஆரோக்கியமான பானங்களை அருந்தலாம். இதில் தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவும் பானங்களைக் காணலாம்
போதுமான அளவு நீர்
உடலை நீரேற்றமாக வைக்கவும், உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், செரிமானத்தை மேம்படுத்தவும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். இது எடை இழப்புக்கு உதவுகிறது
எலுமிச்சை மற்றும் தேன்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்த பானத்தை அருந்தலாம்
பச்சை காய்கறி ஸ்மூத்தி
கீரை, முட்டைக்கோஸ் அல்லது செலரி போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பச்சை காய்கறி ஸ்மூத்திகள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
கிரீன் டீ
கிரீன் டீயில் கேடசின் மற்றும் காஃபின் நிறைந்துள்ளது. இவை அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவும் ஃபிளாவனாய்டு ஆகும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செரிமானத்தை ஊக்குவிக்கவும் எடை குறைக்கவும் உதவுகிறது
இஞ்சி எலுமிச்சைச் சாறு
எலுமிச்சை மற்றும் இஞ்சி கலவையானது உடல் எடை இழப்பை ஊக்குவிக்கும் சிறந்த பானமாகும். இதில் எலுமிச்சை உடலை நச்சுத்தன்மையாக்கவும், இஞ்சி வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது
பெருஞ்சீரக தண்ணீர்
வெறும் வயிற்றில் பெருஞ்சீரக நீரை அருந்துவது உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. இது தொப்பைக் கொழுப்பை எளிதில் குறைக்க உதவுகிறது