விரைவான எடை இழப்புக்கு நீங்க குடிக்க வேண்டிய பானங்கள்

By Gowthami Subramani
15 Jan 2025, 17:01 IST

உடல் எடையிழப்பு பயணத்தில் காலையில் குடிக்க வேண்டிய பானங்கள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். சில காலை பானங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. இதில் எடையிழப்புக்கு ஏற்ற காலை ஷாட்களைக் காணலாம்

சீரகத் தண்ணீர்

இது செரிமானத்திற்கான சிறந்த தீர்வாகும். ஆனால், இது எடையிழப்புக்கும் உதவுகிறது. ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் வடிகட்டி குடிப்பது எடையிழப்புக்கு வழிவகுக்கும்

இஞ்சி, எலுமிச்சை ஷாட்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில், ஒரு சிறிய துண்டு இஞ்சியை அரைத்து சேர்த்து, பின் அரை எலுமிச்சையைப் பிழிந்து சேர்க்கலாம். இந்தக் கலவை செரிமானத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் காலை வழக்கத்திற்கு ஒரு சக்திவாய்ந்த தேர்வாகும்

ஆம்லா ஷாட்

ஆம்லாவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை கொழுப்பு எரிவதை ஊக்குவிக்கிறது. ஒரு புதிய நெல்லிக்காயை தண்ணீரில் கலந்து, வடிகட்டி, காலையில் குடிக்க வேண்டும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது

ஊறவைத்த வெந்தயநீர்

ஒரு டீஸ்பூன் வெந்தய விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும். இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், பசியைக் கட்டுப்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது. இது பயனுள்ள எடை மேலாண்மைக்கு வழிவகுக்கிறது

மஞ்சள், கருமிளகு ஷாட்

வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதில் மஞ்சளில் உள்ள குர்குமின் கொழுப்பை எரிக்கும் பண்புகளையும், கருமிளகு அதன் உறிஞ்சுதலை மேம்படுத்தவும் உதவுகிறது. இது எடை இழப்புக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது

தேன், எலுமிச்சை ஷாட்

வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேனுடன் அரை எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இந்த கசப்பான மற்றும் இனிப்பு பானம் இயற்கையாகவே வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், உடலை நச்சுத்தன்மையாக்கவும் உதவுகிறது