மெடிட்டரேனியன் டயட் உணவுமுறை உடல் எடையைக் குறைக்க சிறந்த டயட் முறையாகும். இதில் எந்த மெடிட்டரேனியன் உணவுகள் உடல் எடையைக் குறைக்கும் என்பதைக் காண்போம்
இலைக்கீரைகள்
இலைக்கீரைகளில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் முழுமை உணர்வைத் தருகிறது. இந்த இலைக்கீரையில் உள்ள அதிக நீர்ச்சத்துக்கள், எடை மேலாண்மைக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது
அவகேடோ
இதில் அதிக கொழுப்பு இருப்பதாக எண்ணி, இதனை உட்கொள்ளத் தயங்குகின்றனர். ஆனால், இந்த அவகேடோவில் உள்ள கொழுப்பு தான் உடல் எடை இழப்புக்கு சிறந்ததாகும்
ஆலிவ் எண்ணெய்
இது எடை இழப்புக்கு பயன்படுத்தக்கூடிய மெடிட்டரேனியன் உணவுவகையைச் சார்ந்ததாகும். இதில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையிழப்புக்கு வழிவகுக்கிறது
சால்மன்
சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் குறைந்த கலோரிகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இது முழுமை உணர்வைத் தந்து பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையிழப்பை ஊக்குவிக்கிறது
பாதாம்
நட்ஸ் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை உள்ளது. இதில் குறிப்பாக பாதாம் திருப்திகரமானதாகவும், பசி ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துவதாகவும் அமைகிறது
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
எடை இழப்புக்கு புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் மிகவும் முக்கியமானதாகும். அதன் படி மெடிட்டரேனியன் உணவு வகையான பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் உடல் எடையிழப்புக்கு ஏற்ரதாகும்
கிரேக்க தயிர்
எடை இழப்பு மற்றும் குடல் ஆரோக்கியம் இரண்டிற்குமே கிரேக்க தயிர் சிறந்த தேர்வாகும். இதன் புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை ஆதரித்து செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது
பெர்ரி
பெர்ரி பழங்கள் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த பழமாகும். இது ஏராளமான நார்ச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்கள் உள்ளது. இது நீண்ட நேரம் முழுமையாக இருக்க உதவுகிறது