உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ஆரோக்கியமான உணவுகளுடன், பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும் குறைந்தளவு சர்க்கரை கொண்ட பழங்களை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது
பெர்ரி
ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, மற்றும் பிளாக்பெர்ரிகளில் குறைந்தளவு சர்க்கரை மற்றும் அதிகளவு நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இது உடல் எடை இழப்புக்கு சிறந்த தேர்வாக அமைகிறது
தர்பூசணி
இது இனிப்பு சுவை கொண்டதாகும். மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவு சர்க்கரை நிறைந்துள்ளது. இதிலுள்ள அதிகளவு நீர்ச்சத்துக்கள் உடல் எடையிழப்புக்கு உதவுகிறது
வெண்ணெய் பழம்
அவகேடோ என்ற வெண்ணெய் பழங்களில் குறைவான சர்க்கரை மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது. இது முழுமையான உணர்வைத் தருவதுடன் எடை இழப்பில் பங்கு வகிக்கிறது
கிவி
கிவி பழத்தில் குறைந்த சர்க்கரை மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இது வைட்டமின் சி மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
திராட்சைப் பழம்
இது வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுவதுடன் குறைந்தளவு சர்க்கரையைக் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இது பசியின்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்சுலின் உணர்திறனைக் கொண்டுள்ளது
இந்த வகையான குறைந்தளவு சர்க்கரை கொண்ட பழங்களை எடுத்துக் கொள்வது மிகுந்த நன்மை பயக்கும்