குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட பெஸ்ட் காலை உணவுகள்!

By Karthick M
21 Aug 2024, 12:11 IST

இட்லி முதல் மசாலா தோசை வரை பல வகையான காலை உணவில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. குறைந்த கார்ப் கொண்ட காலை உணவுகள் பட்டியல் இதோ.

பாலக் ஆம்லெட்

ஆலிவ் எண்ணெய், பாலக்கீரை மற்றும் வெங்காயம் கலந்த ஆம்லெட் ஊட்டச்சத்து மதிப்பு நிறைந்தது. இது தயாரிப்பது மிகவும் எளிமையானது.

கீட்டோ தெப்லா

தெப்லா என்பது பரோட்டா போன்ற குஜராத்தி உணவாகும். இதில் தினை மாவு, சிறிது தயிர், வெந்தய இலைகள் மற்றும் தண்ணீர் சேர்த்து பரோட்டோ செய்யலாம்.

கீட்டோ உப்புமா

தென்னிந்தியர்களின் காலை உணவுகளில் உப்புமா மிகவும் பிரபலமானது. கீட்டோ உப்புமா செய்ய காலிஃபிளவரைப் பயன்படுத்தலாம். அத்துடன் பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளை சேர்க்கலாம்.

போஹா

போஹா என அழைக்கப்படும் அவல் காலையில் விரைவில் சமைக்கக்கூடிய எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவாகும். இதில் தினை, குதிரைவாலி, சாமை போன்ற தினைவகைகளில் கிடைக்கூடிய அவலைப் பயன்படுத்தலாம்.

ஆப்பிள் சப்ஜா ஸ்மூத்தி

ஒரு ஆப்பிள், ஒரு கப் தயிர், ஒரு டீஸ்பூன் சப்ஜா விதைகள் மற்றும் ஒரு டீஸ்பூன் பினட் பட்டர் ஆகியவற்றை ஸ்மூத்தியாக கலந்து காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.