டபுள் மடங்கு வேகத்தில் எடையைக் குறைக்கும் குறைந்த கார்ப் உணவுகள்

By Gowthami Subramani
23 Mar 2025, 19:34 IST

தொப்பையைக் குறைப்பது பலருக்கும் கடினமான ஒன்று. இதற்கு குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகள் சிறந்த தீர்வாக அமைகிறது. இந்த உணவுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இதில் தொப்பையைக் குறைக்க உதவும் சிறந்த குறைந்த கார்ப் உணவுகளைக் காணலாம்

இலை காய்கறிகள்

இது குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் கொண்டதாகும். இது வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவையாகும். இலை காய்கறிகள் செரிமானத்தை மேம்படுத்தி, தொப்பையைக் குறைக்க உதவுகிறது

நட்ஸ், விதைகள்

இது புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சிறந்த ஆதாரமாகும். இதை உட்கொள்வது பசியைக் கட்டுப்படுத்தி, தொப்பையைக் குறைக்க உதவுகிறது. பாதாம், வால்நட்ஸ் மற்றும் சியா விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்

சால்மன்

இதில் கொழுப்பைக் குறைக்க உதவும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள புரதம் தசைகளை இறுக்கமாகவும் கொழுப்பு இல்லாமல் வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும், இது இதயம் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும்

முட்டைகள்

முட்டைகள் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்ததாகும். இது வயிறு நிரம்பிய உணர்வை அளித்து, விரைவாகப் பசி எடுப்பதைத் தடுக்கிறது. இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் கொழுப்பை எரிக்க உதவுகிறது

அவகேடோ

இது ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்ததாகும். அவகேடோ பழம் வயிற்று உப்புசத்தை குறைக்கவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது