ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக உடல் எடை அதிகரித்து பல பிரச்சனைகளைச் சந்திக்கலாம். இதில் எடை குறைய கருஞ்சீரகம் எடுத்துக் கொள்ளும் முறையைக் காணலாம்
பயன்கள்
தினமும் கருஞ்சீரகத்தை சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்வது உடலில் பல பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது. உடலில் கெட்ட கொழுப்பு தேங்க விடாமல் உடல் எடை மற்றும் தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவும் கருஞ்சீரக டீ தயாரிக்கும் முறை குறித்து காணலாம்
தேவையானவை
புதினா- 1 கைப்பிடி, தேன் - 2 ஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்
செய்முறை
தண்ணீரைக் கொதிக்க வைத்து, கருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதில் இஞ்சி சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து புதினா போட்ட பிறகு இறக்கி விடலாம். இதில் சுவைக்கு தேன் சேர்க்கலாம்
எப்போது குடிக்கலாம்
காலை வெறும் வயிற்றில் குடிப்பது நல்ல பலன்களைத் தரும். மேலும் காலை, மாலை அல்லது இரவு தூங்கும் போது கருஞ்சீரக டீ குடிக்கலாம்
தவிர்க்க வேண்டியவை
கருஞ்சீரக டீ குடித்து வரும் சமயங்களில் பால் டீ, காபி குடிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்