சூரிய நமஸ்காரத்தை இப்படி செஞ்சி பாருங்க. வெயிட் டக்குனு குறையும்.

By Gowthami Subramani
03 Jan 2024, 15:02 IST

உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி செய்வது என பலரும் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில், உடல் எடையைக் குறைக்க சூரிய நமஸ்காரம் பெரிதும் உதவுகிறது

சூரிய நமஸ்காரம்

தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்வது உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், நாள் முழுவதும் தேவையான புத்துணர்ச்சியை அளிக்கிறது. இந்த உடற்பயிற்சியை காலை, மாலை என இரு வேளைகளிலும் செய்யலாம்

எவ்வளவு பலன்கள்?

சூரிய நமஸ்காரம் 12 வகையான ஆசனங்களை உள்ளடக்கியதாகும். இந்த ஆசனங்கள் செய்வது உடலை வலுப்படுத்தவும், உடல் எடையைக் கட்டுப்படுஹ்தவும் உதவுகிறது. இது முழு உடற்பயிற்சியாக அமைகிறது

உடல் எடை குறைய

சூரிய நமஸ்காரத்தின் ஒரு தொகுப்பு அதாவது, 12 முதல் 18 நிமிடங்களுக்கு செய்யும் போது, உடலில் இருந்து 14 கலோரிகளை நீக்குகிறது

கொழுப்புகளை அகற்ற

காலை நேரங்களில் இந்த உடற்பயிற்சி செய்வது அன்றாட வாழ்விற்குத் தேவையான கலோரிகளை வழங்கி, தேவையற்ற கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. இதனைப் படிப்படியாகச் செய்து வர, உடலில் நோய்கள் உண்டாவதைத் தடுக்கலாம்

எவ்வளவு நேரம்?

இந்த 12 ஆசன நிலைகளும் இரத்தத்தை சுத்திகரித்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. இது வயிறு, குடல், நரம்பு மையங்களின் செயல்பாட்டை உறுதி செய்கிறது. எனவே உடல் எடையைக் குறைக்க இந்த ஒவ்வொரு ஆசன நிலையிலும் குறைந்தது 5 வினாடிகள் இருக்க வேண்டும்

இந்த வழிகளில் சூரிய நமஸ்காரத்தை செய்து வருவதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதுடன், பல்வேறு ஆரோக்கிய நலன்களைப் பெறலாம்.