எடையிழப்புக்கு மீல்மேக்கர் சாப்பிடலாமா?

By Gowthami Subramani
23 Nov 2024, 17:48 IST

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு மீல்மேக்கர் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

இதில் வைட்டமின்கள் பி, இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. இவை கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதற்கான ஆற்றல் உற்பத்தியைத் தருகிறது

புரதம் நிறைந்த

இது உயர்தர தாவர அடிப்படையிலான புரதத்தின் வளமான மூலமாகும். இது தசைகள் உருவாக்கத்திற்கு மற்றும் திசுக்களை சரி செய்வதற்கு உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது

அதிக நார்ச்சத்துக்கள்

மீல்மேக்கரில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கவும், சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்கவும் உதவுகிறது. இது கொழுப்புச் சேமிப்பிற்கு வழிவகுக்கக் கூடிய இன்சுலின் ஸ்பைக்குகளைத் தடுக்கிறது

முழுமை உணர்வு

இதன் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் முழுமை மற்றும் திருப்தி உணர்வைத் தருகிறது. இது ஒட்டுமொத்த கலோரி நுகர்வைக் குறைக்கிறது. இது அதிகப்படியான கலோரி உட்கொள்ளலைக் குறைத்து காலப்போக்கில் நீடித்த எடை இழப்பை ஆதரிக்கிறது

நிறைவுற்ற கொழுப்புகள்

பல்வேறு விலங்கு அடிப்படையிலான புரத உணவுகளைப் போல அல்லாமல், சோயாவில் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது