முலாம்பழம் சீசன் வந்துருச்சி! எடை குறைய இது ஒன்னு போதும்

By Gowthami Subramani
17 Feb 2025, 18:22 IST

முலாம்பழம் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இதை உட்கொள்வது உடல் எடையிழப்பு முதல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் எடையிழப்புக்கு முலாம்பழம் தரும் நன்மைகள் குறித்து காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

முலாம்பழத்தில் வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். மேலும் இதில் குறைந்தளவிலான கலோரிகள் மற்றும் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது

அதிக நார்ச்சத்துக்கள்

முலாம்பழத்தில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடையிழப்பை மேம்படுத்தலாம்

குறைந்த கொழுப்பு

இந்த பழம் குறைந்த கொழுப்பு உள்ளடக்கம் நிறைந்த பழமாகும். குறைந்த கொழுப்பு நிறைந்த இந்த பழத்தை உட்கொள்வது எடையிழப்பை ஆதரிக்கிறது

குறைந்த கலோரிகள்

முலாம்பழம் குறைந்த கலோரிகள் நிறைந்த பழமாகும். இது கலோரி உட்கொள்ளலைக் கண்காணிப்பவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது

மற்ற நன்மைகள்

முலாம்பழம் உடல் எடையிழப்பு உட்பட இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில், முலாம்பழம் உட்கொள்வதால் கிடைக்கும் மற்ற சில நன்மைகளைக் காணலாம்

நீரேற்றத் தருவதற்கு

முலாம்பழம் நீரேற்றம் நிறைந்த ஆரோக்கியமிக்க பழமாகும். இது உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

இந்த பழம் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பழமாகும். இது சரும ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது