எடையை மாஸ் வேகத்தில் குறைக்க இந்த ஒரு விதையை சாப்பிடுங்க

By Gowthami Subramani
15 Dec 2024, 12:00 IST

பெருஞ்சீரக விதைகள் சுவாசத்தை புத்துணர்ச்சியூட்டுவதற்கு மட்டுமல்லாமல், உடல் எடையிழப்புக்கும் உதவுகிறது. இதில் எடை குறைய பெருஞ்சீரக விதைகள் எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்

வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க

பெருஞ்சீரக விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான ஊக்கத்தை அளிக்கிறது. இந்த ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம் கலோரிகளை எரிக்கவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது

முழுமை உணர்வு

பெருஞ்சீரக விதைகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்க உதவுவதுடன் பசியைக் குறைக்கிறது. மேலும், அதிகப்படியான உணவு உட்கொள்ளலைத் தடுப்பதுடன், கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது

ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கு

இந்த விதைகளை உட்கொள்வது உடல் எளிதாக வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இது உடலை சிறப்பாக செயல்பட உதவுவதுடன், உடலில் கொழுப்பு சேமிப்பதைக் குறைக்கிறது

ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க

பெருஞ்சீரக விதைகளில் துத்தநாகம், செலினியம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை உடல் பருமன் மற்றும் அது தொடர்புடைய நிலைமைகளுக்கு காரணமாக விளங்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது

நச்சுக்களை வெளியேற்ற

பெருஞ்சீரக தேநீரில் டையூரிடிக் பண்புகள் உள்ளது. இவை உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றுவதுடன், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி எடை இழப்புக்கு உதவுகிறது

எப்படி சாப்பிடுவது?

பெருஞ்சீரக விதைகளை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து அடுத்த நாள் காலை விதைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இயற்கையான இனிப்புப் பொருள்கள் சேர்த்து பெருஞ்சீரக தேநீராக உட்கொள்ளலாம். இது தவிர, பெருஞ்சீரக விதைகளை பொடியாக்கி நீரில் கலந்து குடிக்கலாம். இது போன்ற பல்வேறு வழிகளில் பெருஞ்சீரக விதைகளை எடுத்துக் கொள்ளலாம்