வேக வேகமா வெயிட் குறைய இந்த ஒரு சாலட் சாப்பிடுங்க

By Gowthami Subramani
21 Feb 2025, 21:41 IST

உடல் எடையைக் குறைக்க கொண்டைக்கடலை சாலட் ஒரு சிறந்த ரெசிபியாகும். இதில் எடை குறைய கொண்டைக்கடலை சாலட் ரெசிபி தரும் நன்மைகள் மற்றும் அது எவ்வாறு உதவுகிறது என்பதைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

கொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும், கொன்டைக்கடலையில் தாவர அடிப்படையிலான புரதமும் உள்ளது. இது வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதன் மூலம் எடையிழப்பை ஆதரிக்கிறது

புரதம்

இதில் உள்ள அதிகளவிலான புரதம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. எனவே இது மற்ற ஆரோக்கியமற்ற சிற்றுண்டி உட்கொள்ளலைத் தடுக்கிறது. மேலும், இது தசைகளை சரி செய்யவும் உதவுகிறது.

அதிக நார்ச்சத்துக்கள்

கொண்டைக்கடலையில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இவை செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும், நாள்பட்ட சுகாதார நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்கிறது

கொண்டைக்கடலை சாலட்

கொண்டைக்கடலை சாலட் ஆனது பல்வேறு வகையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஊட்டச்சத்து மதிப்பை வழங்குகிறது

பச்சைப்பூண்டு, கொண்டைக்கடலை சாலட்

இது புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் நல்ல சமநிலை கொண்டதாகும்

கீரை, கொண்டைக்கடலை சாலட்

கீரை, ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் கருப்பு மிளகு போன்றவற்றை உள்ளடக்கிய சாலட் அதிக புரதம் நிறைந்த கொண்டைக்கடலை சாலட் ஆகும்