கேரட் சாறு அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் இது எடையிழப்புக்கும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் எடையிழப்புக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரட் சாறு எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த
கேரட் சாற்றில் குறைந்த கலோரிகள், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது எடையிழப்புக்கு ஒரு சிறந்த பானமாக அமைகிறது
நார்ச்சத்துக்கள் நிறைந்த
கேரட் சாற்றில் முழு கேரட்டை விட குறைவான நார்ச்சத்துக்கள் உள்ளது. ஆனாலும், கேரட் சாறு அருந்துவது செரிமானத்தை மேம்படுத்தி வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியதாக வைக்கிறது
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த
கேரட் சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இது உடலில் ஆற்றல் பற்றாக்குறை மற்றும் அதிகம் சாப்பிடும் பழக்கத்தைத் தடுக்கிறது
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க
கேரட் சாற்றில் வைட்டமின் பி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது
இனிப்பு ஏக்கத்தைக் குறைக்க
இனிப்பு உட்கொள்வது உடல்பருமனுக்கு வழிவகுக்கிறது. எனவே இனிப்பு சிற்றுண்டிகளுக்குப் பதிலாக கேரட் ஜூஸை எடுத்துக் கொள்ளலாம். இதன் இயற்கையான இனிப்பு, சர்க்கரை இனிப்புகளுக்கான ஏக்கத்தைப் பூர்த்தி செய்கிறது
நீரேற்றத்தை அதிகரிக்க
எடை இழப்புக்கு நீரேற்றம் மிக முக்கியமானது. இந்நிலையில் கேரட் சாறு அருந்துவது திரவ உட்கொள்ளலை அதிகரிக்கவும், உடலை நீரேற்றமாக வைக்கவும், ஆற்றலுடன் வைத்திருக்கவும் உதவுகிறது
குறைந்த அளவில் குடிப்பது
கேரட் சாறு பல்வேறு நன்மைகள் நிறைந்ததாகும். ஆனால், அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளலைத் தவிர்க்க குறைந்தளவு கேரட் சாறு அருந்துவது நல்லது