உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு கற்றாழை ஒரு சிறந்த தேர்வாகும். கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு, நச்சு நீக்கும், மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகள் உள்ளது. எடையிழப்புக்கு கற்றாழையை பல்வேறு வழிகளில் சேர்க்கலாம்
எலுமிச்சைச் சாறுடன்
கற்றாழை ஜெல்லை தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறுடன் சேர்த்து பருகலாம். சிறந்த முடிவுகளைப் பெற, வெறும் வயிற்றில் குடிக்கலாம்
புதினா இலைகளுடன்
கற்றாழை ஜெல்லை புதினா இலைகள் மற்றும் தண்ணீருடன் கலக்க வேண்டும். இவை பசியைக் கட்டுப்படுத்தவும், புத்துணர்ச்சியூட்டும் பானத்தை அனுபவிக்கவும் உதவுகிறது
தேங்காய் நீருடன்
கற்றாழை ஜெல்லை தேங்காய் நீரில் கலந்து குடிப்பது, நீரேற்றத்தைத் தருகிறது. இது உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும் பானமாக அமைகிறது
இஞ்சி சாறு
கற்றாழை ஜெல்லை இஞ்சி சாறுடன் கலந்து குடிக்க வேண்டும். இந்த கலவை செரிமானத்திற்கு உதவுவதுடன், கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது
அலோ வேரா ஸ்மூத்தி
கற்றாழை ஜெல்லை பிடித்த பெர்ரி அல்லது அன்னாசி போன்ற பழங்களுடன் சேர்த்து சுவையான மற்றும் சத்தான கற்றாழை ஸ்மூத்தியைத் தயார் செய்யலாம். இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது