ஜிம்மிற்கு போகாமல் தொப்பையைக் குறைப்பது எப்படி?

By Gowthami Subramani
27 Feb 2025, 21:40 IST

தொப்பைக் கொழுப்பைக் குறைக்க ஜிம்மிற்குச் செல்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற வழிகள் இருப்பினும், இதை பெரும்பாலானோர் விரும்ப மாட்டார்கள். இந்த தீவிரமான ஜிம் பயிற்சியை விரும்பாதவர்கள் எளிமையான முறையில் வீட்டிலேயே உடல் எடையைக் குறைக்கலாம்

சூடான எலுமிச்சை நீர்

லையில் முதலில் சூடான எலுமிச்சை நீரைக் குடிப்பது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கொழுப்பை எரிக்க உதவுகிறது

அதிகம் நடப்பது

அதிகமாக உட்காருவது தொப்பைக் கொழுப்பை அதிகரிக்கலாம். எனவே உணவுக்குப் பிறகு நடப்பது அல்லது படிக்கட்டுகளில் ஏறுவது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்

அதிக புரதம், நார்ச்சத்து உணவு

புரத உணவு உட்கொள்வது நம்மை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இவை இரண்டுமே தொப்பைக் கொழுப்பைக் குறைக்க அவசியமாகும்

கொழுப்பு எரிப்பு மசாலாக்கள்

அன்றாட உணவில் மஞ்சள், கருப்பு மிளகு மற்றும் இஞ்சி போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது இயற்கையாகவே தொப்பைக் கொழுப்பு இழப்பை துரிதப்படுத்துகிறது. எடையிழப்புக்கு வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க இதை அன்றாட உணவு அல்லது தேநீரில் சேர்க்கலாம்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தொப்பைக் கொழுப்பைக் குறைக்க சர்க்கரை பானங்கள், பதப்படுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது வீக்கம் மற்றும் கூடுதல் கொழுப்பு சேமிப்பை ஏற்படுத்தலாம். இதற்கு மாற்றாக தண்ணீர், மூலிகை தேநீர் அல்லது தேங்காய் தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம்