PCOS காரணமாக கொழுப்புச் சேமிப்பை ஊக்குவிக்கும் இன்சுலின், ஆண்ட்ரோஜன் அளவு அதிகரிப்பு போன்ற ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால், தொப்பைக் கொழுப்பைக் குறைப்பது சவாலானது. இதில் PCOS உடன் தொப்பைக் கொழுப்பை எப்படி குறைக்கலாம் என்பதைக் காணலாம்
இன்சுலின் அளவை நிர்வகிப்பது
சமச்சீரான உணவை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்த வேண்டும். அதன் படி, கொழுப்புச் சேமிப்பைத் தடுக்க உதவும் பருப்பு வகைகள், இலை கீரைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற குறைந்த GI குறியீடு உணவுகளை உட்கொள்ள வேண்டும்
சரியான உடற்பயிற்சி
கார்டியோவுடன் வலிமை பயிற்சியை இணைப்பதன் மூலம் சுறுசுறுப்பாக இருக்கலாம். இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் போது கொழுப்பு எரிவதை ஊக்குவிக்கிறது
நீரேற்றமாக இருப்பது
நிறைய தண்ணீர் குடிப்பது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவை வீக்கத்தைக் குறைக்கவும், இன்சுலின் அதிகரிக்கக்கூடிய சர்க்கரை பானங்களைத் தவிர்க்கவும் உதவுகிறது
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
சர்க்கரை, பொரித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற முழு உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்
சீரான தூக்கம்
தூக்கமின்மை ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது. சீரான தூக்கம் ஹார்மோன்களை சீராக வைப்பதுடன் கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கிறது
மன ஆரோக்கியம்
நாள்பட்ட மன அழுத்தம் PCOS அறிகுறிகளை மோசமாக்குகிறது. எனவே கார்டிசோல் அளவைக் கட்டுப்படுத்த யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம் போன்றவற்றை மேற்கொள்ளலாம்