அதிக கலோரிகள் மற்றும் நார்ச்சத்து இருப்பதால், வாழைப்பழங்கள் கொழுப்பு மிக்கதாக கருதப்படுகிறது. எனவே யாராவது எடை அதிகரிக்க முயற்சிக்கும்போது, மஞ்சள் பழத்தை அதிக அளவில் உட்கொள்ளலாம் என பரிந்துரைக்கிறார்கள்.
வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்
வாழைப்பழத்தில் அதிக அளவிலான கார்ப் மற்றும் கலோரிகள் உள்ளன. குறைந்த அளவிலான புரதச்சத்து மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளது. ஒரு நடுத்தர வாழைப்பழத்தில் 105 கலோரிகள் மற்றும் 27 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அதேசமயம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன
வாழைப்பழத்தில் அதிக கலோரிகள் இருப்பதால் அது உடல் எடையை அதிகரிக்கும் எனக்கூறப்படுகிறது. ஆனால் இதனை சரியான முறையில் உட்கொண்டால் மட்டுமே எடை கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எப்படி சாப்பிட வேண்டும்?
வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தால், அதற்கு கொழுப்பு அதிகமுள்ள பாலை பயன்படுத்த வேண்டும். அத்துடன் தேன், பாதாம், இரண்டு முழு வாழைப்பழங்களை சேர்த்து மில்க் ஷேக் தயாரிக்க வேண்டும்.
வாழைப்பழம் + பீனட் பட்டர்
உடல் எடையை அதிகரிக்க விரும்புவோர் வாழைப்பழத்துடன் பீனட் பட்டர் கலந்து மில்க் ஷேக் தயாரிக்கலாம். ஏனெனில் பீனட் பட்டரில் உள்ள புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் கலோரிகள் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
வாழைப்பழம் + நெய்
வாழைப்பழத்தை நெய்யுடன் கலந்து குடிப்பது உடல் எடையை அதிகரிக்க உதவும். இதற்கு பால், வாழைப்பழம், நெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து மில்க் ஷேக் தயாரிக்கவும். இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், எடை படிப்படியாக அதிகரிப்பதை உணரலாம்.