15 நாட்களிலேயே உடல் எடையை குறைக்கலாம்!

By Karthick M
26 Jan 2024, 02:38 IST

உடல் எடை குறைய வழிகள்

உடல் பருமன் என்பது பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாகும். இதற்கான தீர்வை தேடுபவர்கள் எண்ணிக்கை ஏராளம். உடல் எடையை குறைக்க உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

முழு தானியம்

முழு தானியம் உட்கொள்வது உடல் எடையை குறைக்க சிறந்த உணவாகும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிக நல்லது.

கீரை வகைகள்

கீரை உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள் உடலுக்கு சிறந்த வகையில் நன்மை பயக்கும். வைட்டமின் ஏ, இரும்பு மற்றும் பல தாதுக்கள் இதில் காணப்படுகின்றன. இது இரத்த சோகை, உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கும்.

புரதங்கள்

உடல் பருமனை குறைக்க புரதம் உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம். நட்ஸ் வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடல் எடையை குறைக்க உதவும்.

சியா விதைகள்

சியா விதைகள் ஆரோக்கியமான தேர்வாகும். இதில் நல்ல அளவு நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது எலும்புகளை வலுவாக்கி உடல் எடையை குறைக்க உதவும்.

பால் பொருட்கள்

சரியான அளவில் நெய், பால் மற்றும் தயிரை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதுவும் உடல் எடையை குறைக்க பெருமளவு உதவும்.

பழங்கள்

உடல் எடையை குறைக்க வாழைப்பழம், பெர்ரி, ஆப்பிள் போன்ற பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

உடல் எடையை குறைக்க உணவு வகைகளில் கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியம். உடல்நலம் தொடர்பான தகவல்களுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.