உண்மையில் சியா விதைகள் உடல் எடையை குறைக்குமா? -எப்படி சாப்பிடனும்?

By Kanimozhi Pannerselvam
13 Mar 2024, 14:57 IST

வேகமாக எடை குறையுமா?

சியா விதைகள் ஒரு சூப்பர்ஃபுட் என்பதில் சந்தேகமில்லை. பல ஊட்டச்சத்து நிபுணர்கள் இதை உணவில் சேர்க்க பரிந்துரைக்கின்றனர். இதில் கலோரிகள், கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

எவ்வளவு, எப்போது?

தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி சியா விதைகளை (20 கிராம்) உணவில் சேர்ப்பது சிறந்தது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் சியா விதைகள் எடை இழப்புக்கு விரைவான தீர்வு அல்ல, சில நேரங்களில் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த உணவுகளை உண்பதோடு உடற்பயிற்சி செய்வதன் மூலம் கொழுப்பை விரைவாகக் குறைக்கலாம்.

சியா சீட்ஸ் வாட்டர்

சியா விதைகளை ஊறவைத்த தண்ணீரை வெறும் வயிற்றில் பருகுவது உடல் எடையைக் குறைக்க உதவும். இதற்கு ஒரு ஸ்பூன் சியா விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் குடிக்க வேண்டும்.

சியா ஸ்மூத்தி

ஒன்று அல்லது இரண்டு பழங்கள், ஒரு ஸ்பூன் சியா விதைகள், ஒரு கிளாஸ் குளிர்ந்த பால், இரண்டு ஸ்பூன் ஓட்ஸ், ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்கு கலந்து காலை உணவாக காலையில் உட்கொள்ளலாம்.

ஓட்ஸ் + சியா சீட்ஸ்

அரை கப் ஓட்ஸ், ஒரு கப் பாதாம் பால் மற்றும் ஒரு ஸ்பூன் சியா விதைகளை ஒரு ஜாடியில் எடுத்து ஒரு கரண்டியால் கலக்கவும். இப்போது ஜாடியை இறுக்கமாக மூடி, இரவு முழுவதும் ப்ரிட்ஜில் வைக்கவும். காலையில் நீங்கள் அதில் பழங்கள் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளை சேர்த்து சாப்பிடலாம்.

சியா சாலட்

கோழி இறைச்சி, ப்ரோக்கோலி, கேரட் மற்றும் உப்பு மற்றும் மிளகு சேர்த்து பதப்படுத்தப்பட்ட மற்ற காய்கறிகளுடன் ஒரு ஸ்பூன் சியா விதைகளை சேர்த்து, சிறிது ஆலிவ் எண்ணெய், தேவையான அளவு உப்பு, சீரகம் கலந்து சாப்பிடலாம். ஆலிவ் ஆயிலுக்குப் பதிலாக சிறிது வெண்ணெயையும் பயன்படுத்தலாம்.

சியா புடிங்

ஒரு ஸ்பூன் சியா விதைகள், ஒரு கிளாஸ் பாதாம் பால் (தேங்காய் பால் அல்லது முந்திரி பால்), ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் அல்லது இலவங்கப்பட்டை தூள், ஒரு ஸ்பூன் தேன் அல்லது மேப்பிள் சிரப் மற்றும் நறுக்கிய நட்ஸ் வகைகள் ஆகியவற்றை ஒரு ஜாடியில் கலந்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். ஓரிரு மணி நேரம் கழித்து கிளறி இரவு முழுவதும் அப்படியே விட்டு மறுநாள் சாப்பிடவும்.