உடல் எடையைக் குறைக்க இன்று பலரும் இடைப்பட்ட உண்ணாவிரத முறையைக் கடைபிடிக்கின்றனர். இந்த எடை குறைப்பு வழியைத் தேர்வு செய்யும் முன், அதைக் கடைபிடிக்கும் முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்
இடைப்பட்ட உண்ணாவிரதம்
இது உணவு மற்றும் உண்ணாவிரதத்திற்கு இடையில் சுழற்சி செய்யும் உணவு முறையை உள்ளடக்கியதாகும். இது வளர்ச்சிதை மாற்ற மேம்பாட்டிற்கும், எடை இழப்பை ஊக்குவிக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது
நேர கட்டுப்பாட்டு உணவு
உணவின் போது நேரக் கட்டுப்பாட்டிற்கு ஒவ்வொரு நாளும் 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கலாம். இதில் உணவு முறையை 16:8 முறையைக் கடைபிடித்து உணவை எடுத்துக் கொள்வர்
5:2 உணவுமுறை
இந்த டயட்டில் வாரத்தில் ஐந்து நாள்களுக்கு வழக்கமான உணவை எடுத்துக் கொண்டு, அதன் பின் வரும் தொடர்ச்சியான இரண்டு நாள்களுக்கு கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தலாம்
Eat-Stop-Eat
இந்த உணவுமுறையில், வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இதில் கலோரி இல்லாத பானங்களை உட்கொள்ளலாம்
மாற்று நாள் விரதம்
இது ஒவ்வொரு நாளும் உண்ணாவிரதத்தை உள்ளடக்கியதாகும். இந்த உண்ணாவிரதத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து, அடுத்த நாள் வழக்கமான உணவுமுறையைக் கையாள்வதாகும்
வாரியர் உணவுமுறை
இந்த முறை இடைப்பட்ட உண்ணாவிரதத்தின் தீவிரமாகக் கருதப்படுகிறது. இதில் சுமார் 4 மணி நேரம் மட்டும் சாப்பிடுவது அடங்கும். 20 மணி நேர உண்ணாவிரதத்தின் போது பச்சையாக பழங்கள் மற்றும் காய்கறிகளை மிகக் குறைவான அளவில் சாப்பிடலாம்
இடைப்பட்ட உண்ணாவிரதம் எளிமையான முறை அல்ல. சில உடல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த முறை பரிந்துரைக்கப்படுவதில்லை. எனினும் உணவில் மாற்றங்களைச் செய்யும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது